Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்பிஐ வங்கி விதித்துள்ள புதிய கட்டணங்களின் விவரங்கள்!!

எஸ்பிஐ வங்கி விதித்துள்ள புதிய கட்டணங்களின் விவரங்கள்!!
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (10:38 IST)
ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
குறைந்தபட்ச இருப்புத் தொகை:
 
# எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# புறநகர் பகுதி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# நகரப் பகுதி வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 
 
# இவ்வாறு இல்லாவிட்டால் அதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செக் புக்:
 
# ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் 50 செக்குகள் இலவசமாக வழங்கலாம். 
 
# அதற்குப் பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு செக்குகளுக்கு 3 ரூபாய் சேவை கட்டணமாக அளிக்க வேண்டும்.
 
# 25 செக்குகளுக்கு 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
 
வங்கி அறிக்கை:
 
# வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் முதல் அறிக்கை இலவசமாக வழங்கப்படும்.
 
# இதுவே டூப்ளிகேட் அறிக்கை வேண்டும் என்றால் 100 ரூபாய் சேவை கட்டணமாகப் பெற வேண்டும்.
 
டெபிட் கார்ட் பயனர்கள்:
 
# டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்குக் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 
ஏடிஎம் வாடிக்கையாளர்கள்:
 
# எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும்.
 
# அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 
 
# பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமாக எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயஸ் கார்டன் வீட்டில் தங்க மறுக்கும் தினகரன்: நீங்களும் போகாதிங்க!