30 ஆண்டுகளுக்கு பிறகு புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் நாசிக்கில் உள்ள ரூபாய் அச்சிடும் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
நாட்டில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது மத்திய அரசு. இந்த உத்தரவுக்குப் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாசிக்கில் உள்ள ரூபாய் அச்சிடும் அச்சகத்தில் புதிய 1 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. மேலும், அச்சகத்தில் 10, 20, 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சில்லறை தட்டுப்பாட்டால் மீண்டும் 1 ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கான 1, 10, 20, 50, 500 ரூபாய் நோட்டுக்கள் இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அச்சிடப்பட்ட 5 கோடி ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கு 1 ரூபாய் நோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.