கடந்த ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது.
ஆனால் இந்த நோட்டுக்கள் அவசரகதியில் அச்சானதால் கலர்குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் ஒருசில நோட்டுக்கள் வெளிவந்தன
இந்நிலையில் ஒருபக்கம் மட்டுமே அச்சாகியுள்ள ரூ.500 நோட்டு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் ரஞ்சித் சாலையில் உள்ள பரோடா வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த அல்டாப் சாகி என்பவருக்குதான் இந்த ஒருபக்க ரூ.500 கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அல்டாப் சாகி உடனே அந்த நோட்டை வங்கிக்கு எடுத்து சென்றார். வங்கி அதிகாரிகள் சோதனை செய்து அந்த நோட்டு போலியானது இல்லை என்பதை உறுதி செய்து அதன்பின்னர் அவருக்கு வேறு நோட்டை கொடுத்தனர்.,
இவ்வாறு அவ்வப்போது நடைபெற்று வரும் தவறுகள் குறித்து ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.