Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியானது லெனோவா இசட் 5: விவரம் உள்ளே...

Advertiesment
லெனோவா இசட் 5
, புதன், 6 ஜூன் 2018 (11:39 IST)
அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது. 
 
இது முழுமையான பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் என டீசர்களில் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 90 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.
 
மேலும், அரோரா புளு, பிளாக் மற்றும் இன்டிகோ புளு நிறங்களில் கிடைக்கிறது. லெனோவோ இசட்5 பிளாக் 64 ஜிபி விலை ரூ.13,625, அரோரா மற்றும் இன்டிகோ புளு 64 ஜிபி மாடல் ரூ.14,670, 128 ஜிபி மாடல் ரூ.18,870 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
லெனோவோ இசட்5 சிறப்பம்சங்கள்:
# 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ், 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
# 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 3300 எம்ஏஹெச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடிக்கு லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுடுங்க - பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்