பிச்சிகிட்டு போகும் ஜியோ: முதலீடுகளை பிடிச்சு போடும் அம்பானி!!!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (12:44 IST)
ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்க நிறுவனமான கேகேஆர் & கோ நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. 
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும்.  
 
இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை அதாவது, ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டன.   
 
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.  
 
இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்தது. இதன் மதிப்பு ₹11,367 கோடி. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி முதலீடுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்க நிறுவனமான கேகேஆர் & கோ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளது. ஜியோவில் ரூ. 11,367 கோடி முதலீடு செய்வதன் மூலம் கேகேஆர் & கோ நிறுவனம் 2.32% பங்குகளை பெற உள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments