Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் ஜியோ: கலக்கத்தில் செல்போன் நிறுவனங்கள்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (13:29 IST)
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்து டச் ஸ்க்ரீன் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஜியோ ரூ.1500க்கு பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அந்த போனில் டச் ஸ்க்ரீன் இல்லாத்தும் பெரிய ஸ்க்ரீன் இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதையும் சரி செய்ய இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்க உள்ளது ஜியோ. 
 
நவீன வசதிகள் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிளெக்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஜியோ.  
 
முதல்கட்டமாக 10 கோடி போன்களை தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகளவு மொபைல் போன்களை உற்பத்தி செய்வதால், அரசாங்கத்திடம் வரி சலுகையை கோர ஃபிளெக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments