ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பீச்சர் போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு ஆகஸ்டு 24 ஆம் தேதி நடைபெற்றது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது.
ஜியோ போனை வாங்க அதிக அளவில் முன்பதிவு செய்துவந்ததால், முன்பதிவு நிறுத்தி வைத்தது. மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்ட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது. தீபாவளிக்குப் பிறகு, இரண்டாவது கட்ட ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
அதோடு, முதற் கட்ட புக்கிங்கில் ஜியோ போனை 6 மில்லியன் பேர் புக் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீபாவளிக்குள் மொபைல் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது,
மேலும், ஜியோ ரிசார்ஜ் கட்டணத்திலும் மாற்றங்கள் வரும் 19 ஆம் தேதி கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது.