Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்மடங்கு கேஷ்பேக்: ஜியோ ரீசார்ஜ் மீது அசத்தல் சலுகை!!

Advertiesment
மும்மடங்கு கேஷ்பேக்: ஜியோ ரீசார்ஜ் மீது அசத்தல் சலுகை!!
, வியாழன், 9 நவம்பர் 2017 (17:50 IST)
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் 100 சதவிகித கேஷ்பேக் வழங்கியது. தற்போது மும்மடங்கு கேஷ்பேக் சேவையை வழங்கியுள்ளது. 


 
 
ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்யும் போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 100 சதவிகிதம் கேஷ்பேக்குடன் சேர்த்து ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
அமேசன் பே, பேடிஎம், போன்பெ, மொபிகுவிக் மற்றும் ஃப்ரீசார்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ரூ.300 மதிப்புடைய கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது இதில் ஆக்சிஸ் பே நிறுவனமும் இணைந்துள்ளது. 
 
அமேசான் பே, ஆக்சிஸ்பே, ஃப்ரீசார்ஜ், மொபிகுவிக், பேடிஎம் அல்லது போன்பெ உள்ளிட்ட வேலெட்களை கொண்டு ரீசார்ஜ் செய்யும் போது உடனடி கேஷ்பேக் ரூ.300 வரை பெற முடியும்.
 
மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.1,899 மதிப்புடைய வவுச்சர்களை வழங்க பல்வேறு முன்னணி இணைய வர்த்தகர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது. 
 
100 சவிகிதம் கேஷ்பேக் மற்றும் புதிய சலுகைகள் நவம்பர் 10 தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்தது: நடிகை கஸ்தூரி