Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த ஜியோ....

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த ஜியோ....
, சனி, 6 ஜனவரி 2018 (18:40 IST)
ஜியோவிற்கு போட்டியாக மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை தொடர்ந்து புது புது சலுகைகளை அறிவித்து வருகின்றன. 
 
சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகளை வழங்கியது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மாதாந்திர சலுகை திட்டங்களின் கட்டணங்களை ரூ.50 வரையில் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
தற்போது, செயல்பாட்டில் இருக்கும், ரூ.199, ரூ.399, ரூ.459 உள்ளிட்ட திட்டங்களுக்கான கட்டணங்களில் ரூ.50 குறைத்துள்ளது. மேலும், ரூ.198, ரூ.398, ரூ.488 ஆகிய திட்டங்களுக்கான டேட்டா வரம்பு உயர்த்தப்பட்டு, நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா மற்றும்  முறையே 28, 70, 84 மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. 
 
இந்த ரீசார்ஜ் திட்ட மாற்றங்கள் அனைத்தும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்சரிக்கும் தினகரன் தரப்பு!