Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாதங்களுக்கு 300 ஜிபி ஃப்ரீ: ஜியோ பிரீவியூ சலுகை!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (17:15 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜிகா ஃபைபர் பிரீவியூ சலுகையில் 300 ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜிகா ஃபைபர் சேவை குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட்டது. இந்த சேவையை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவித்தது. 
 
இந்நிலையில், பிரீவியூ சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு சேவை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
 
அதாவது, 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 300 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
மேலும், பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 1 ஜிபி வரை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை பயன்படுத்த முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். பிரீவியூ சேவை  நிறைவுற்றவுடன் அடுத்து பிரீபெய்ட் கட்டணங்களை செலுத்தி சேவையை தொடரலாம், சேவையை தொடர விரும்பாதவர்கள் சேவையை துண்டித்து, முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments