Publish Date: Thu, 27 Oct 2016 (10:36 IST)
Updated Date: Thu, 27 Oct 2016 (10:39 IST)
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 'டீல் வாலி திவாளி' என்ற பெயரில் விமான டிக்கெட் கட்டணத்தை 921 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இந்த ஆஃபர் டிக்கெட்கள் அனைத்தும் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே.
இந்தத் தீபாவளி ஆஃபரில் அக்டோபர் 30 வரை விமான டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம். இந்த டிக்கெட் விலைகளில் டிக்கெட் புக் செய்யும் தினத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் பயணம் செய்யலாம்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் 921 ரூபாய்க்குச் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லலாம் என அறிவிக்கபட்டிருக்கிறது. இந்த ஆஃபர் டிக்கெட்கள் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே.