Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா: ஐபோன் விற்பனையில் சாதனை

Advertiesment
ஐபோன்
, புதன், 4 மே 2016 (15:12 IST)
ஐபோன் விற்பனை இந்த வருடம் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டாலும், இந்தியாவில் அதன் விற்பனை படு ஜோராக நடந்துள்ளது. விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா சதனை படைத்துள்ளது.


 
 
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனின் விற்பனை அமெரிக்கா, சீனா போன்ற மிகப்பெரிய சந்தையை கொண்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளது இந்தியா. வரும் 2022ஆம் ஆண்டு, மக்கள் தொகையில் இந்தியா முன்னணி நாடாக திகழும் என்றார்.
 
மேலும் கூறிய அவர் இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளனர், அவர்கள் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அமெரிக்க, சீனா சந்தைகளில் கடைசி காலாண்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 11 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஐபோன் விற்பனை 56 சதவீதம் உயர்ந்துள்ளது என டிம் குக் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்டு பாடி ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலின் : இது புதுசு (வீடியோ)