Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நிறுவனங்கள் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைக்கும் காரணம் என்ன???

பிரபல நிறுவனங்கள் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைக்கும் காரணம் என்ன???

பிரபல நிறுவனங்கள் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைக்கும் காரணம் என்ன???
, புதன், 20 ஜூலை 2016 (16:23 IST)
கடந்த சில நாட்களாக இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பிரபலமாக விளங்கும் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் கட்டணங்களைக் குறைத்து வருகின்றன.


 


பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வர்த்தக ரீதியில் 4ஜி இண்டர்நெட் சேவையை குறைந்த விலையில் துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்து வருவதாகக் கூறப்படுகின்றன.

அதன் படி ஐடியா நிறுவனம் தனது டேட்டா சேவையில் சுமார் 45 சதவீதம் அதிகரித்துப் கூடுதல் டேட்டா வழங்க இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தனது சேவைகளுக்கு ஏற்ப டேட்டா அளவினை சுமார் 67 சதவீதம் அதிகரிப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் சில நாட்களில் கூடுதல் டேட்டா வழங்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ வரவு மூலம் தொலைத்தொடர்பு சந்தையில் இண்டர்நெட் டேட்டா பேக் கட்டணங்கள் சுமார் 15-20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது இண்டர்நெட் பேக் கட்டணங்களை மாற்றியமைக்க முக்கியக் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கின்றது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியிருப்பு பகுதியில் குண்டு வீசிய அமெரிக்கா: 11 குழந்தைகள் உட்பட 56 பேர் பலி