ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய வாகன சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக்கும், மக்களால் அதிகம் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இதற்கு மாற்றங்கள் செய்யவேண்டிய காலகட்டம் நெருங்கி வருவதால், ஹூண்டாய் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் மும்முரமாக தயாராகி வருகிறது.
தோற்றம்:
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்களில், இதன் முன் பகுதி, பின் பகுதி மற்றும் டோர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவை உருமறைப்பு செய்யபட்டிருக்கிறது. மேலும், இதன் இன்டீரியரும் உருமறைப்பு செய்யபட்டிருக்கிறது.
இஞ்ஜின்:
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கிற்கு, 1.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் உபயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியர்பாக்ஸ்:
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின்களும், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இனைக்கப்பட்டிருக்கும். விரைவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் சேர்க்கப்படலாம்.
புதிய இணைப்புகள்:
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கில், பல்வேறு வகையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படலாம்.
விலை:
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் விலை, தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கை காட்டிலும், சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.