அதிகம் சம்பாதிக்கும் 10,000 பேரை பார்செல் செய்யும் வங்கி!!

செவ்வாய், 8 அக்டோபர் 2019 (17:02 IST)
ஹெச்எஸ்பிசி வங்கி அதிகம் சம்பளம் வாங்கும் தனது 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல வங்கியான ஹெச்எஸ்பிசி தனது 10,000 ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடிவெடுத்துள்ளதாம்.
 
ஆம், உலகம் முழுவதும் 67 நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஹெச்எஸ்பிசி வங்கி பொருளாதார மந்தநிலை காரணமாக அதிக சம்பளம் வாங்கும் 10,000 ஊழியர்களை நீக்க முடிவெடுத்துள்ளதாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 200 பேரை இவ்வங்கி பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்கள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது?