மீண்டும் உச்சத்தை தொட்டது; ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!!

வியாழன், 3 அக்டோபர் 2019 (12:05 IST)
ஏற்றமும் இறக்கமுமாய் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்து ரூ.29,000 கடந்துள்ளது. 

 
கடந்த மாதம் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.30,000 வரை கிடுகிடுவென உயர்ந்துது. அதன் பின்னர் இந்த மாத துவக்கத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் ரூ.28,000 ரேஞ்சில் இருந்தது. 
 
ஆனால், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.29,088-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் ரூ.30 ரூபாய் அதிகரித்து ரூ.3,636-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
வெள்ளி விலையும் கிராமுக்கு 1.20 காசுகள் உயர்ந்து ரூ.49.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பேலன்ஸ்டாக இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் லலிதா ஜுவல்லரியில் நகைகளை லவட்டியது எப்படி? திருடர்களின் மாஸ்டர் பிரைன்!!