ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு சரிவா??

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (16:51 IST)
தங்கம் விலை ஒரு மாதமாக படிபடியாக உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் சரிவை கண்டுள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத வகையில் பவுன் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று காலையில் இருந்தே தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

இதனால் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.3700 ஆக இருந்தது. இதனால் பவுன் விலை ரூ.29,600 ஆக விற்பனையானது. அதன் பின்பு பிற்பகலில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 ஆக குறைந்தது. ஒரு கிராம் ரூ.3,658 க்கு விற்பனையானது. நேற்று ஒரு பவுன் ரூ.29,928 க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒரு தம்ளர் காஃபி, ஒரு தம்ளர் டீ. ரூ 78, 650 .. அதிரவைத்த' ஹோட்டல் பில் '!