தங்கம் விலை நாளுக்கு நாள் விலை ஏறி வந்த நிலையில் இன்று ஒருநாளில் இரண்டு முறை விலை குறைந்துள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச அளவிலான தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தங்கம் வாங்குவதை இயல்பாக கொண்ட மக்கள், இப்படி அதிகரிக்கும் தங்க விலையால் தங்கம் வாங்குவதே எட்டாக்கனியாகி விடுமோ என தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரு கிராம் ரூ.9,045க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று காலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,800க்கு விற்பனையாகி வந்தது. தற்போது மீண்டும் கிராமுக்கு ரூ.130 குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.1320 குறைந்து சவரன் ரூ.71,040 ஆக விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1040 குறைந்து ரூ.70,000க்கு விற்பனையாகி வருகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை விலைக் குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K