Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்ஃபி ஃபோகஸ்டு ஜியோனி S6s ஸ்மார்ட்போன்

Advertiesment
செல்ஃபி ஃபோகஸ்டு ஜியோனி S6s ஸ்மார்ட்போன்
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (17:00 IST)
ஜியோனி நிறுவனம் S6s என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


 
 
டூயல் சிம் ஆதரவு கொண்ட ஜியோனி S6s ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் Amigo 3.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. ஜியோனி S6s ஸ்மார்ட்போனில் 2.5 டி வளைந்த எட்ஜ் கிளாஸ் உடன், 5.50 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
 
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஜியோனி S6s ஸ்மார்ட்போனில் சோனி IMX258 சென்சார், f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 5பி லென்ஸ் மற்றும் பிளாஷ் கொண்ட 8 முன் கேமரா, 3150mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
 
ரூ.17,999 விலையுடைய இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வழியாக ஆன்லைனில் பிரத்யேகமாக கிடைக்கும். மேலும் ஜியோனி S6s ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் ஃபிசிக்கல் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பிற ஆன்லைன் சில்லறை கூட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 கத்திகளை விழுங்கிய பஞ்சாப் போலீஸ்காரர்