சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.3 இன்ச் 720x1480 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6739 பிராசஸர்
# பவர்விஆர் ரோக் ஜிஇ8100 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
# 1ஜிபி / 2ஜிபி ரேம், 16ஜிபி / 32ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 3000 எம்ஏஹெச் பேட்டரி
விலை விவரம்:
1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5,499
2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,499