Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு
, புதன், 28 செப்டம்பர் 2016 (14:24 IST)
சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்படும் பிஎப்  பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு அதே போல் ஆயுள் காப்பீடும் உண்டு. 

 
இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம்.
 
இத்திட்டம் பிஎப் திட்டத்தில் பங்குபெரும் பணியாளர்களுக்கும் உண்டு. வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (EPFO) மூலம் கட்டமைக்கப்படும்.
 
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.
 
இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி காப்பீட்டிற்கான தொகையை 6 லட்சம் வரை பெறலாம்.
 
இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். 
 
குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் இந்து திருமணத்துக்கு சட்டப்படி அனுமதி