Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபோர்டு நிறுவனத்தில்... காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்!

ஃபோர்டு நிறுவனத்தில்... காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்!

Advertiesment
ஃபோர்டு நிறுவனத்தில்... காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்!
, புதன், 20 ஜூலை 2016 (11:58 IST)
ஜெர்மனியில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில்தான் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் சமயோஜிதமாக ரோபோக்களை உருவாக்கி அதனை தற்போது அரங்கேற்றியுள்ளது ஃபோர்டு நிறுவனம்.


 


நாள்தோறும் உதயமாகும் புது புதுத் தொழில்நுட்பங்கள் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. அந்த வகையில் கார் உற்பத்தி செய்ய பல தொழிலாளர்கள், நாள் கணக்கில் உழைக்க வேண்டிய இடத்தில் ரோபோக்களைக் களமிறக்கி வேலையை எளிமையாக்கியிருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.

ஃபோர்டு நிறுவனத்தில் கைகளைப் போன்ற வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பணிக்கமர்த்தப்பட்டு உள்ளன. தொழிலாளர்கள் சிரமப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை எளிதாக செய்து விடுமாம் இந்த ரோபோக்கள். சென்சார் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள் அதன் பணியின் குறுக்கே ஏதேனும் தொழிலாளர்கள் கைகளைக் குறுக்கிட்டால், உடனடியாக தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால், தேவையற்ற விபத்துகள் நேரமால் தவிர்க்க முடியும் என்கிறது ஃபோர்டு நிறுவனம்.

வேலை நேரத்தைத் தவிர, தொழிலாளர்களுடன் கை குலுக்குவது, காபி அருந்தும்போது சீயர்ஸ் சொல்வது, தட்டிக் கொடுப்பது என கம்பெனி பாஸ் ரேஞ்சுக்கு எல்லா செயல்களையும் செய்யுமாம் இந்த ரோபோக்கள்.

விரைவில் இந்தியவிலும் இந்த ரோபோக்களை எதிர்பார்க்கலாம்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்