புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
100 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதில் வங்கிகள் பல சிரமங்கள் சந்தித்து வரும் நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளிலும் விரைவில் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ரொக்க கையிருப்பு மற்றும் சந்தையில் பணப்புழக்கம் மேம்படுத்தப்படும்.
புதிய ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியிடப்படுகிறது. பணம் அச்சிடப்பட்ட ஆண்டாக 2016 ஆம் ஆண்டும், சுத்தமான இந்தியா திட்டத்தின் குறியீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய 500 ரூபாய் நோட்டு வண்ணம், அளவு, வடிவமைப்பு, பாதுகாப்பு குறியீடுகளின் இருப்பிடம் போன்றவை வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய 500 ரூபாய் நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம், கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
பணத்தின் மதிப்பான 500-இன் நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த எண் பச்சை - நீலம் நிறமாக மாறக்கூடியதாக இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.
வலது புரத்தில் அசோகர் தூண் சின்னமும், ஆர்பிஐ சின்னமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 1000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கை கோள் உள்ளதைப் போன்று உள்ளதைப் போன்று புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டு இருக்கும்.
கண்பார்வையற்றோருக்கான குறியீடுகள்:
கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் 5 கோடுகளும் வலதுபுறத்தில் வட்டமாக ரூபாய் 500 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.