இந்தியன் ரிசர்வ் வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது.
ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் வங்கி கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் யாரும் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.
ரிசர்வ் வங்கி எப்போதும் மக்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.