Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வளர்ச்சியிலும் வீழ்ச்சி; சியோமியின் பரிதாப நிலை...

Advertiesment
வளர்ச்சியிலும் வீழ்ச்சி; சியோமியின் பரிதாப நிலை...
, திங்கள், 6 மே 2019 (13:14 IST)
சியோமி நிறுவனத்தின் விற்பனை விவரங்கள் குறித்த தகவலை ஆய்வு செய்து ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், விற்பனை அதிகரித்தாலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.2% சரிவை சந்தித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இந்த தகவல் முற்றிலுமாக மறுத்துள்ளார் சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக வெளியாகி இருக்கும் அறிக்கை விவரங்கள் சரியானதாக இல்லை. 
webdunia
அவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது என லெய் ஜூன் தெரிவித்துள்ளார். 
 
கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு எழுத வந்த மாணவி மரணம் – மதுரையில் நடந்த சோகம் !