ஆர்பிஐ அன்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து கிரெடிட் நிறுவனங்களும் ஜவவரி 2017 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் பார்க்கும் வசதியை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர் கடன் வாங்கவில்லை என்றாலும் கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று கூறப்படுகிறது.
கிரெடிட் அறிக்கை:
கிரெடிட் தகவல் அறிக்கையில் வாங்கிய கடனிற்கான வரலாறு மற்றும் கடன் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் சரியான முறையில் கடன் செலுத்த படுகிறதா என சரிபார்க்க இயலும்.
வருடத்திற்கு ஒரு முறை அதை சரிபார்ப்பதன் மூலம் கடன் அறிக்கை சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள இயலும்.
கிரெடிட் அறிக்கையில் வாங்கியதற்கான கடன் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் கிரெடிட் கார்டு, உங்கள் மனைவி அல்லது குழந்தைகள் வைத்துள்ள கார்டுகளின் விவரங்களையும் பார்க்க இயலும்.
கிரெடிட் ஹெல்த்:
கிரெடிட் அறிக்கையை ஆராய்வதன் மூலம் நிதி ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்க இயலும். மேலும் அதில் எவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள், அதைச் சரியாக திருப்பிச் செலுத்தி வருகிறீர்களா எவ்வளவு தவனை இன்னும் உள்ளது என்று அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.
கிரெடிட் வரலாறு:
கிரெடிட் வரலாற்றை உருவாக்க, புதிய வாடிக்கையாளராக இருக்கும் போது குறைந்தது 6 மாத காலம் தேவைப்படும்.
கிரெடிட் ஸ்கோர்:
கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 500 வரை உள்ள போது மிக அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் அதாவது முக்கியமாக சில கடன் தவணைகளை உடனே செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
500 - 650க்கு இடையில் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
650 -750க்கு இடையில் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் மிதமான ரிஸ்க்கில் உள்ளீர்கள் என்பதாகும்.
750-850க்கு இடையில் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் குறைவான ரிஸ்க் ஸ்கோர் அளவு ஆகும்.
850க்கும் கூடுதலாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவான ரிஸ்க் நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கும்.