பணியாளருக்கு சம்பளத்தை வழங்குவதற்காக பணியமர்த்துபவரால் பராமரிக்கப்படும் வங்கி கணக்கே சம்பள கணக்கு எனப்படுகிறது. இது பொதுவாக ஜீரோ பாலன்ஸ் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
பணியாளரின் வங்கி சம்பள கணக்கிற்கு மாதாந்திர அடிப்படையில் சம்பளம் போடப்படும். மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால், சம்பள கணக்கானது சேமிப்பு வங்கி கணக்காக கருதப்படும்.
ஆனால், உங்களது சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்ற அதற்கான விண்ணப்பத்தை பெற்று கோரிக்கையை நிரப்பி கொடுத்தாலே போதும்.
சம்பளக் கணக்கின் ஒப்பந்தம் வங்கிக்கும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இடையில் இருந்தாலும், இம்மாற்றத்திற்குப் பிறகு சம்பள கணக்கின் நன்மைகளை வங்கிகள் வழங்குவதில்லை.
சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இருப்புத் தொகையைக் கணக்கில் வழக்கமாக வைத்திருத்தல் அவசியம்.
ஒரு சம்பளக் கணக்கை சேமிப்புக் கணக்காக நீங்கள் மாற்றும் முன்னர், தேவையான குறைந்த பட்ச தொகை இருப்பைச் சரிபார்ப்பது சிறந்தது.