டி.சி.எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2014ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கணினி நிரல் (TCS CodeVita 2014 - TCS Global Coding Contest) எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.
மூன்று சுற்றுகளாக நடக்க உள்ள இந்தப் போட்டியில் அறிவியல், பொறியியல் துறை மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பெரு, மெக்சிகோ, கொலம்பியா, உருகுவே நாட்டு மாணவர்கள், 2014 ஜூலை 26ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, 2015, 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் தங்கள் படிப்பை முடிக்க உள்ள மாணவர்கள், இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
இந்தப் போட்டியின் மூலம், மாணவர்கள் தங்கள் திறமையை உலகறியச் செய்ய முடியும். டி.சி.எஸ். நிறுவனமும் இதன் மூலம் திறன் மிகுந்த மாணவர்களைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளது.