Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கு 5G-கே நாக்கு தள்ள; 6G-க்கு அடி போட்ட சீனா!!

Advertiesment
இங்கு 5G-கே நாக்கு தள்ள; 6G-க்கு அடி போட்ட சீனா!!
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (18:34 IST)
உலக நாடுகள் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சீனா 6ஜி சேவையை துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
மின்னல் வேகத்தில் இண்டர்நெட் பயன்பாட்டுக்கு உதவும் 5ஜி தொழில்நுட்பம் உலகின் ஒருசில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவிலும் இந்த சேவை தொடங்கிவிட்டது. ஒரு முழு திரைப்படத்தை 10 வினாடிகளில் டவுன்லோடு செய்துவிடும் அளவுக்கு வேகமுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் விருப்பத்தோடு மாறி வருகின்றனர்.
 
சீனாவின் சீனா மொபைல், சீனா யூனிகாம், சீனா டெலிகாம் உள்பட ஐந்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கிவிட்டதாகவும், இதற்கான கட்டணமாக இந்திய மதிப்பில் மாதம் ரூ.1,289 முதல் ரூ.6,030 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
5ஜி சேவை அறிவிக்கப்பட்டவுடன் சீனாவில் இந்த சேவையை பெற 10 மில்லியன் பேர் பதிவு செய்திருப்பதாகவும் அடுத்த மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 150 முதல் 170 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளை கவனிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  அதேபோல செப்டம்பர் மாதத்தில் ஹூவாய் நிறுவனம் 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிவிட்டதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனியா, ராகுல், பிரியங்காவிற்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கட்?