பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1999 சலுகையில் சில மாற்றங்களை குறுகிய காலத்திற்கு கொண்டுவந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை குறுகிய காலத்திற்கு ரூ. 1999 சலுகையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
ரூ.1999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 436 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த சலுகையில், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.