அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.50-க்கு ஒரு ஜி.பி 4ஜி டேட்டாவை அறிவித்துள்ள நிலையில், மிகக்குறைந்த விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை ஒன்றை வரும் 9-ந்தேதி அறிவிக்க இருப்பதாக பிஎஸ்என்எல் இயக்குனர் தெரிவித்தார்.
'Experience Unlimited BB 249' என்ற அந்த சலுகையில் மாதந்தோறும் ரூ.249-கட்டணத்திற்கு எவ்வித வரம்பும் இல்லாமல் டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆறு மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை அதற்கு பிறகு 'BBG Combo ULD 499' திட்டமாகவோ அல்லது வாடிக்கையாளர் விரும்பும் திட்டமாகவோ மாற்றிக் கொடுக்கப்படும்.
முதல் 1 ஜி.பி-க்கு 2 எம்பிபிஎஸ் வேகமும் அதன் பிறகு 1 எம்பிபிஎஸ் வேகமும் இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜிபி டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜிபி இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதை பிஎஸ்என்எல் சுட்டிக்காட்டியுள்ளது.