ஸ்பெஷல் ஆஃபர் கொடுத்த பிஎஸ்என்எல்: வாடிக்கையாளர்கள் குஷி!

புதன், 11 செப்டம்பர் 2019 (15:04 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் ஓணத்திற்கு கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.  
 
பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்த ஓணம் பண்டிகையை தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டாட முடிவெடுத்து அத சில வவுட்டர்கள் மீதான கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
ஆம், பிஎஸ்என்எல் கொடுத்துள்ள இந்த ஆஃபரில் 9 ஜிபி முதல் 15 ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா வழங்கப்படும். கூடுதல் டேட்டா சலுகை ஆனது வருகிற செப் 15 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
 
இந்த கூடுதல் டேட்டா ரூ.186, ரூ.446, ரூ.485, ரூ.666, ரூ.1,699 மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்கள் (எஸ்.டி.வி) ஆன ரூ.187, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.429 ஆகிய திட்டங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழக அரசியலில் ரஜினிக்கு எதிர்ப்பு : விஜய் வந்தால் ஆதரவு ! - சீமான் அதிரடி