ஜியோ பைபர் சேவையை ரிலையன்ஸ் வெளியிட்டதும் அதற்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் திட்டத்தின் கீழ் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் சுமார் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த திட்டம் 99.99 சதவீத சிறந்த நெட்வெர்க்கை வழங்குவதற்கான நோக்கம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 24 மணிநேரமும் ஆதரவு வழங்கும் நெட்வொர்க் ஆபரேட்டிங் சென்டர் செயல்பட்டு வருகிறது.