Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஆண்டு முதல் பிஎஸ்- 4 தரம் கொண்ட எரிபொருள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும்

அடுத்த ஆண்டு முதல் பிஎஸ்- 4 தரம் கொண்ட எரிபொருள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும்

Advertiesment
அடுத்த ஆண்டு முதல் பிஎஸ்- 4 தரம் கொண்ட எரிபொருள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும்
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (11:14 IST)
பிஎஸ் - 4 எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் முதல் கட்டமாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனிடையே நாடு முழுவதும் அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.


 



ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாடு விதிகள் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் பாரத ஸ்டேண்டர்டு மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்க படுகிறது. அதன்படி, பிஎஸ் - 4 விதிகளுக்குட்பட்ட தரத்தில் அமைந்த பெட்ரோல், டீசல் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும். மாசு அதிகமாக வெளியேற்றாத வகையில் சுத்திகரிக்கப்பட் எரிபொருள்களாக மற்றும் சல்பர் அளவு அவற்றில் குறிப்பிட்ட விகிதத்தில் மட்டுமே இருக்கும்.

இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், ஏற்கெனவே முதல் கட்டமாக இந்தத் திட்டம் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கேரளம், கர்நாடகம், ஒடிஸா, கோவா, தெலங்கானா, மகாரஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் இந்த பிஎஸ் - 4 எரிபொருள் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பெட்ரோலியப் பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மாநகர பேருந்தில் தீடீர் தீ விபத்து: பயணிகள் ஓட்டம்