குறைந்தது நோக்கியா, ரெட்மி, சாம்சங், ஹானர் ஸ்மார்ட்போன்களின் விலை!!

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (13:11 IST)
ப்ளிப்கார்ட் நிறுவனம் பிக் ஷாப்பிங் டே என்ற சிறப்பு விற்பனையை இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. 
 
சமீபத்தில் அமேசான் சம்மர் விற்பனையை முடித்த நிலையில், ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும். 
இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மீது பல தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃபர் குறித்த விவரங்கள் ஒரிரு தினங்களில் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. நோக்கியா, ரியல்மி, ரெட்மி, சாம்சங், ஹானர், ஒப்போ போன்ற ப்ரான் ஸ்மார்ட்போன்கள் நல்ல தள்ளுபடி விலை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கேமரா, லேப்டாப் என பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்டிஎப்சி கார்ட் மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்குமாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments