ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குளோபல் கேம் சேஞ்சர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 25 துணிச்சலான வணிகத் தலைவர்களின் பெயர் வெளியாகியுள்ளது.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்தப் பட்டியலில் இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 5 மாதத்தில் மட்டும் 7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரிலையன்ஸ் ஜியோ.
டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருந்ததை விட 2017 மார்ச் மாதம் 7.10 பில்லியன் டாலர் உயர்ந்து, 29.9 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.