அமேசான் நிறுவனம் 36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்று தீர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் விழாக்காலங்களில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு தனது விழாக்கால விற்பனையை ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்’ என்ற பெயரில் வழங்கியது.
செப்டம்பர் 29 ஆம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கு துவங்கிய இந்த விழாக்கால விற்பனை அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 28 மதியம் 12 மணிக்கே துவங்கியது.
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல்போன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி, வட்டியில்லா தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தி தந்தது.
இதுமட்டுமல்லாமல் ஷூ, வாட்ச், கண்ணாடிகள், கைப்பைகள் போன்றவற்றிற்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. அக்டோபர் 4 வரை நடக்கும் இந்த விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையானை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்’ விறபனை துவங்கிய 36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகிவிட்டது என தகவல் தெரிவித்துள்ளது. அதோடு, வழக்கமான விற்பனை அளவைவிட இந்த முறை 10 மடங்கி அதிக விற்பனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.