அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய EMI சேவையை அறிவித்துள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சேவையை பற்றி விரிவாக காண்போம்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தற்போது அமேசான் புதிய EMI சேவையை வழங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை அடுத்த வருடம் கட்டலாம் என தெரிவித்துள்ளது.
அதுவும் குறிப்பாக ஹெட்டிஎப்சி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு அடுத்த வருடம் ஜனவரி முதல் EMI செலுத்தலாம் என அறிவித்துள்ளது.
இந்த சலுகை, இன்று முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதோடு சேர்த்து வரும் 21 முதல் 24 வரை அமேசான் தனது The Great Indian Festival Sale சலுகைகளையும் வழங்கவுள்ளது.