Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஎம்ஐ வசதியுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் சேல்: அசத்தும் ஏர்டெல்!

இஎம்ஐ வசதி
Webdunia
சனி, 26 மே 2018 (13:05 IST)
ஏர்டெல் வலைத்தளத்தில் எளிய மாத தவனையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
 
நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தபட்சம் ரூ.3799 முன்பணமாக ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் (www.airtel.in/onlinestore) செலுத்தினால் போதும். மாத தவனை ரூ.1499 முதல் துவங்குகிறது.
 
இது மட்டுமின்றி ஏர்டெல்லும் ஸ்மார்ட்போன் மீது சலுகைகளை வழங்கியுள்ளது. 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல் ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
இஎம்ஐ விவரம்: 
 
3 ஜிபி ராம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.3799 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். இதன் பின் 12 மாதங்களுக்கு ரூ.1,499 மாத தவனையாக செலுத்த வேண்டும்.
 
நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.
 
நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும். 
 
நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments