Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மிஸ்டு கால், 1ஜிபி இலவச 4ஜி டேட்டா!! ஏர்டெல் அதிரடி

Advertiesment
ஒரு மிஸ்டு கால், 1ஜிபி இலவச 4ஜி டேட்டா!! ஏர்டெல் அதிரடி
, புதன், 28 செப்டம்பர் 2016 (15:06 IST)
ஏர்டெல் நிறுவனமானது இலவச 4ஜி தரவு வழங்குவதின் மூலம் தனது 3ஜி பயனர்களை 4ஜி சேவைக்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. 

 
இதனை முன்னிட்டு 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது.
 
ஏர்டெல் வழங்கும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவு பெற ஏர்டெல் தொலைபேசி எண்ணில் இருந்து ஏர்டெல் டோல் ப்ரீ எண்ணிற்கு (52122) ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
 
ஏர்டெல் தொலைபேசி எண்ணில் இருந்து 52122 என்ற எண்ணிற்கு டயல் செய்தால், அழைப்பு தானாக துண்டிக்கப்படும். பின்னர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும்.
 
அதில், 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவை பெறுகிறீர்கள் என்ற ஏர்டெல் எஸ்எம்எஸ் கிடைக்கும் (#121*2# என்ற எண்ணை டயல் செய்து 4ஜி டேட்டா பேலன்ஸை செக் செய்யவும்).
 
பயனர் தனது எண்ணிற்கு எந்த விதமான 4ஜி ரீசார்ஜையும் நிகழ்த்தி இருக்க கூடாது அப்போது தான் இந்த இலவச தரவு வாய்ப்பை பெற முடியும்.
 
ஏர்டெல் எண்ணில் ஏற்கனவே எதாவது 4ஜி தரவு திட்டம் செயல்பாட்டில் இருந்தால், இந்த வாய்ப்பை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று கார்டன் திரும்பும் ஜெயலலிதா? : பரபரப்பு தகவல்கள்