Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

உள்ளூர் பயணிகளுக்காக சைவத்துக்கு மாறிய ஏர் இந்தியா

Advertiesment
ஏர் இந்தியா
, திங்கள், 10 ஜூலை 2017 (14:25 IST)
ஏர் இந்தியா நிறுவனம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் எக்கனாமி கிளாஸ் பயணிகளுக்கு அசைவ உணவு வழங்குவதை அதிரடியாக நிறுத்தியுள்ளது.


 

 
ஏர் இந்தியா விமான நிறுவனம் திடீரென சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது எக்கானமி கிளாஸ் பயணிகளுக்கு அவைச உணவு வழக்குவதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:-
 
எக்கானமி வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும். இந்த கட்டுப்பாடு உள்ளூர் சேவை விமனங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எக்கனாமி கிளாஸில் அசைவ உனவுகள் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. மேலும் அசைவ உணவுகள் அதிக செலவு பிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு சிலர், மத்திய அரசு மாட்டிறைச்சி தடையை தொடர்ந்து தற்போது இதை செய்துள்ளனர் என்று தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநில காங்கிரஸ் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படம் அனுப்பிய பொதுச்செயலாளர்