Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

899 ரூபாய்க்கு விமான டிக்கெட்: ஏர் ஏசியா அதிரடி!!

Advertiesment
899 ரூபாய்க்கு விமான டிக்கெட்: ஏர் ஏசியா அதிரடி!!
, வியாழன், 20 அக்டோபர் 2016 (13:13 IST)
பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா 899 ரூபாய்க்கு விமான பயண டிக்கெட்களை ஆஃபராக அறிவித்துள்ளது.

 
இந்த சலுகை விலை டிக்கெட்களில் மார்ச் 31, 2017 வரை பயணம் செய்யலாம். அக்டோபர் 23 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
 
டிக்கெட் கட்டணம்:
 
899 ரூபாய்க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம். 999 ரூபாயில் கொச்சி முதல் பெங்களூரு வரையிலும், கொச்சி முதல் ஹைத்ராபத் வரை செல்ல 2,699 ரூபாய் கட்டணத்திலும் கோவாவில் இருந்து டெல்லி செல்ல 3,199 ரூபாயிலும், ஜெய்ப்பூர் முதல் பூனே வரை செல்ல 2,399 ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது.
 
ஏர் ஏசியாவின் இணையதளத்தில் பெங்களூரு முதல் டெல்லி செல்ல இப்போது 8000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது ஆனால் சலுகை விலை கட்டணமாக 2,699 ரூபாயாக டிசம்பர் மாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்டேவை கலாய்க்கும் மீம்ஸ் : பாராட்டிய விவேக்