Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 மே 1 முதல், 2018 பிப்ரவரி 6 வரை விமான பயணம் ரூ.799 மட்டுமே ஏர் ஏசியா அசத்தல் அதிரடி!!

Advertiesment
2017 மே 1 முதல், 2018 பிப்ரவரி 6 வரை விமான பயணம் ரூ.799 மட்டுமே ஏர் ஏசியா அசத்தல் அதிரடி!!
, புதன், 16 நவம்பர் 2016 (10:09 IST)
விமான போக்குவரத்து சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இது போன்ற சலுகை விலை டிக்கெட்களால் மேலும் அதன் தேவை அதிகரிக்கிறது. 


 
 
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5.89 லட்சம் பயணிகள் ஏர் ஏசியா விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 42 சதவீதம் அதிகமாகும்.
 
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு பயணம் செய்வதற்கான டிக்கெட்களை ரூ.799-ல் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் ஏசியா அறிவித்துள்ளது. 
 
இந்தச் சலுகை விலை டிக்கெட்களை நவம்பர் 20 ஆம் தேதிக்குல் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 2017 மே 1 முதல் 2018 பிப்ரவரி 6 வரை பயணம் செய்யலாம்.
 
பயண சலுகை விலை:
 
# கவுகாத்தி - இம்பால் வழித்தடத்தில் மட்டும் 799 ரூபாய் என்ற கட்டணத்தில் பயணம் செய்யலாம். 
 
# கொச்சியில் இருந்து பெங்களுரூவுக்கும், ஹைதராபாத்தில் இருந்து பெங்களுரூ செல்ல 999 ரூபாயும் கட்டணமாக உள்ளது.
 
# பெங்களுரூவில் இருந்து கோவா மற்றும் பெங்களுரூவில் இருந்து விசாகபட்டினம் செல்ல 1,299 ரூபாய்.
 
# ஹைதராபாத்தில் இருந்து கோவா செல்ல 1,599 ரூபாய்.
 
# கொச்சியில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய்.
 
# டெல்லியில் இருந்து பெங்களுரூ செல்ல 2,499 ரூபாய்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைபேசியில் பேசிய ஜெயலலிதா ஏன் பொதுமக்களிடம் வாட்ஸ்ஆப்பில் பேசவில்லை?: காரணம் இருக்கு!