Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதார் எண்ணை ரேசன் கார்ட் உடன் இணைக்க வேண்டுமா??

ஆதார் எண்ணை ரேசன் கார்ட் உடன் இணைக்க வேண்டுமா??
, செவ்வாய், 27 டிசம்பர் 2016 (10:15 IST)
தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் (TNEPDS) என்ற புதிய  செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. 


 
 
இந்த செயலியில் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க இயலும்.
 
ஆதார் எண்ணை பொது விநியோகத் திட்ட (TNEPDS) செயலியில் உள்ளிடுவதன் மூலம், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஒன்று வரும். 
 
அதனை உள்ளிட்ட பின்னர் குடும்ப அட்டை விவரங்களைச் செயலியில் உள்ளிட்டு அதனை எளிதாக ஆதார் அட்டையுடன் இணைக்கலாம்.
 
ஏற்கனவே பதிவு செய்திருந்தால் குடும்ப அட்டையின் மொத்த விவரமும் பட்டியலிடப்படும். ஒரு வேலைப் பதிவு செய்யவில்லை என்றால் செயலியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
 
பொது விநியோகத் திட்ட (TNEPDS) செயலியின் மூலம் குடும்ப அட்டையின் கடை விவரம், கடையில் உள்ள பொருட்களின் விவரங்கள், குடும்பத்தின் விவரம், புகார் அளிக்கும் சேவை போன்றவை உள்ளது.
 
மேலும் இந்தச் செயலியின் மூலம் முகவரி திருத்துதல், கூடுதல் நபரைச் சேர்த்தல் போன்றவற்றைச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உணவில் ரகசியமாக கலக்கப்பட்டது என்ன?: கோர்ட்டுக்கு செல்லும் ஆதாரம்!