இனி நமக்கு அருகில் எங்கே டாய்லெட் உள்ளது என்பதை இனி கூகுளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் நிறுவனம் ‘Loo Review’ என்ற விழிப்புணர்வு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர்வாசிகள் தங்களுக்கு அருகில் உள்ள டாய்லெட் குறித்த விபரங்களை கூகுள் மேப்பில் பதிவு செய்யலாம்.
அதன்படி இது வரையில் சுமார் 1,700 நகரங்களில் உள்ள 45,000 மேற்பட்ட டாய்லெட்டுக்கள் கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி கூகுள் மேப், கூகுள் சர்ச், கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றில் எளிமையாக டாய்லெட் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
கூகுள் மூலம் டாய்லெட் எங்கு உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
1. மொபைல் டேட்டா, லொக்கேஷன் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டும்.
2. கூகுள் மேப் ஓபன் செய்து, பப்லிக் டாய்லெட் என்று செர்ச் பாரில் டைப் செய்ய வேண்டும்
3. இப்போது நமது இருப்பிடம், நமக்கு அருகில் உள்ள கழிப்பிடம் ஆகியவை இப்போது கூகுள் மேப்பில் பார்க்கலாம்.
4. அதோடு பில்டர் வசதியைப் பயன்படுத்தி எந்த டாய்லெட் அதிக ரேட்டிங் பெற்றுள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.