கருப்பு பணம், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. இதனால் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், இருப்பினும் தடைக்கு 5 மாதம் முன்பே புதிய 500, 2,000 ரூபாய் நோட்டு டிசைனுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்ற தகவல் வெளிவந்ததுள்ளது.
கடந்த ஆண்டு மே 19ம் தேதியன்று முதலில் புதிய ரூபாய் நோட்டு டிசைனுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. பிறகு ஜூன் 7ம் தேதியன்று புதிய டிசைனுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.