Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற 10 வழிகள்: கூகுள் தேடல் ரிப்போர்ட்!!

கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற 10 வழிகள்: கூகுள் தேடல் ரிப்போர்ட்!!
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (11:32 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததை அடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற பின்வரும் முறைகளை தேர்வு செய்தனர்.


 
 
பின் தேதியிலான வைப்பு நிதிகள்: 
 
கூட்டுறவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகக் கருப்புப் பணம் உடையோருக்கு அறிவிப்புக்கு முந்தைய தேதியில் வைப்பு நிதியில் முதலீடு செய்யச் சிறப்புச் சலுகையை அளிக்கிறது. 
 
குறிப்பாகச் சிறு நகரம், டவுன் மற்றும் கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் NBFC நிறுவனங்கள் இத்தகையை Back Dated வைப்பு நிதி சேவை எளிமையாக அனைவருக்கும் வழங்குகிறது.
 
கோவில்: 
 
கோவில் அறக்கட்டளைகள் மூலம் பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை அதிகளவிலான கமிஷன் தொகையுடன் மாற்றி உள்ளனர்.
 
வட்டியில்லாக் கடன்:
 
கருப்புப் பணத்தை வெள்ளையாகும் வித்தகமாக நிலையான வளர்ச்சியைக் கண்டு வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடனை அளித்து வருகின்றனர். 
 
அடுத்தச் சில மாதங்களில் இப்பிரச்சனை முழுமையாகக் குறைந்தபின் கருப்புப் பணத்தைத் திரும்பப்பெறுவார்கள்.
 
ஜன்தன் வங்கி கணக்குகள்: 
 
ஜன்தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட 80 சதவீத கணக்குகள் மிகவும் குறைந்த வருமான உடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படி இருக்கும் நிலையில் பல வங்கி அதிகாரிகள் மற்றும் கருப்பு பண முதலைகள் இணைந்து கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலைக்கு இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
மாஃபியா:
 
ஒரே இரவில் இந்தியாவில் பல இடங்களில் ரூபாய் நோட்டு மாஃபியா-க்கள் உருவாகியுள்ளனர். 
 
இவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்களுக்கு 15 முதல் 80 சதவீத கமிஷனை பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு 100 ரூபாய் நோட்டுகளை அளிக்கின்றனர். 
 
இவை அனைத்தும் கள்ள சந்தையில் நடப்பவை. 
 
நிறுவனங்கள்: 
 
இந்தியாவில் இருக்கும் பல நிறுவன தலைவர்கள் ஊழியர்களுக்கு வங்கி கணக்கை துவங்கி 3 முதல் 8 மாதம் வரையிலான முன்கூடிய சம்பளத்தை அளிக்கின்றனர். 
 
இப்படி வைப்புச் செய்யப்படும் பணம் அனைத்தும் 500, 1000 ரூபாய் நோட்கள் தான். மேலும் வைப்புத் தொகை 2.5 லட்சத்திற்கும் குறைவான மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அது மட்டும் அல்லாமல் 3 முதல் 8 மாதம் வரையில் டெபிட் கார்டு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது.
 
தங்கம்:
 
மோடி வெளியிட்ட அறிவிப்பால் இந்தியாவில் தங்கம் விற்பனை உச்சத்தை அடைந்தது. பல நகைக்கடை உரிமையாளர்கள் தங்கத்தைப் பின் தேதியில் பெற்றதாகக் கணக்கு காட்டி அதிகளவிலான தங்க நகை, தங்க பிஸ்கட்களை விற்பனை செய்துள்ளனர். 
 
பின் தேதியிட்ட பில் மூலம் வாங்குபவர்களிடம் கணிசமான கமிஷனை பெறுகிறது நகை கடைகள். இத்தகைய பரிமாற்றத்தால் 15 முதல் 20 சதவீத கமிஷன் நகை கடை உரிமையாளர்களுக்குக் கமிஷன் பெறுகின்றனர். 
 
விவசாயம்
 
விவசாயத்தின் மூலம் எவ்வளவு வருமானம் லாபம் வந்தாலும் அதற்கு வரி இல்லை. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பலர் விவசாயிகள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர். 
 
அரசியல் கட்சிகள்:
 
இந்திய சட்ட அமைப்பின் படி அரசியல் கட்சிகள் 20,000 மற்றும் அதற்குக் குறைவாகப் பெறப்படும் நன்கொடைக்கு யார் அளித்தார் என்ற விபரங்களை அளிக்கத் தேவையில்லை. 
 
இதனால் பல அரசியல் கட்சிகள் நன்கொடையின் வாயிலாகப் உதவி செய்துள்ளனர். இப்படிப் பெறப்படும் தொகையை டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பின் வெள்ளையாக மாற்ற முடியும்.
 
வங்கி முதலீடு: 
 
கருப்பு பணம் வருமான அறிக்கைக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் வங்கியிலோ, நிதி நிறுவனங்களிலோ டெப்பாசிட் செய்தால் 33 சதவீத வரி மட்டும் அல்லாமல் வரி மீதான 200 சதவீத அபராதம் விதிக்கப்படும். 
 
ஆனால் வருமான அறிக்கையில் 'other sources' என்பதன் கீழ் எவ்வளவு தொகையைக் கணக்குக் காட்டினாலும் அதற்கு 33 சதவீத வரியை மட்டும் செலுத்தினால் போதும். இதையும் பயன் படுத்தி பலர் பணத்தை மாற்று உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாத சம்பளம் தேதி நெருங்கிவிட்டது; ஏடிஎம்-ல் பணம் கிடைக்குமா? அச்சத்தில் பொதுமக்கள்