வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஏர் இந்தியா விமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும், நீதிமன்றத்தின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் விமான போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வயலார் ரவி, “வேலை நிறுத்தத்தை தொடரும் வரை அவர்களுடன் பேசப்போவதில்லை என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேனே” என்று கூறியுள்ளார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் விமானிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாற்றை நீதிமன்றம் முன்னெடுத்து வருகிறது என்றும், அதன் முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அரசு முடிவெடுக்கும் என்றும் ரவி கூறியுள்ளார்.
விமானிகளின் வேலை நிறுத்தம் சட்டப்பூர்வமானதல்ல என்று கூறிய நீதிமன்றம், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசாரணையில் இன்று விமானிகள் தரப்பு வாதத்தையும், ஏர் இந்தியா நிறுவனத்தின் வாதத்தையும் கேட்டுவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.