புது டெல்லியில் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மகேந்திரா ரீனால்ட் நிறுவனம் லாகன் டூரர் ரக சொகுசு காரை அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு வருடமும் புது டெல்லியில் வாகன கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது, அயல்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
பிரஞ்ச் நாட்டைச் சேர்ந்த ரீனால்ட் நிறுவனமும், இந்தியாவின் மகேந்திரா நிறுவனமும் கூட்டு சேர்ந்து மகேந்திரா ரீனால்ட் என்ற வாகன உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகின்றன.
இதன் சார்பில் லாகன் ரக வாகனத்தில் புதிதாக லாகன் டூரர் என்ற சொகுசு காரை அறிமுகம் செய்ய உள்ளன. இது பெட்ரோல், டீசலில் இயங்கும் இரண்டு ரக காரையும் அறிமுகப்படுத்துகின்றன. ஜாவா பிரைவுன், மிஸ்ட் சில்வர், டைமன்ட் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.
இது குறித்து மகேந்திரா ரீனால்ட் தலைமை நிர்வாக அதிகாரி நலீன் மேத்தா கூறுகையில், புதிய லாகன் டூரர் உள்புறம் பார்ப்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை வி.ஐ.பி நிறுவனத்துடன் இணைந்து சந்தை படுத்த உள்ளோம். இதன் மூலம் உள்புறம் கிடைக்கும் அதிக இடம், வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவை எளிதாக விளக்கப்படும் என்று கூறினார்.
இதன் விலை ரூ.5.50 லட்சம் இருக்கும்.