பணவீக்கம் 0.37 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மொத்த விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற வாரத்தில் இருந்து அதிகரிக்க துவங்கியது. அதற்கு முன் 13 வாரங்கள் எதிர்மறையாக இருந்தது.
செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம். 0.37 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தையை வாரத்தில் 0.12 ஆக இருந்தது.
தற்போது கணக்கிடப்பட்டுள்ள செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இறைச்சி, மசாலா பொருட்கள், மக்காச் சோளம், சர்க்கரை, வெல்லம், கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதே போல் உருளை கிழங்கு, வெங்காயம், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், பால் விலையும் உயர்ந்துள்ளது.
கோதுமை விலை 5.12 %, அரிசி விலை 14.94 %, பருப்பு விலை 15 % அதிகரித்துள்ளது.